வவுனியாவில் இந்தியப் பிரஜை கைது..!!

குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர், வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் வைத்து பொலிஸார் இவரைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.