ஜனாதிபதி அனைத்து இன மக்களுடனும் அன்பு கொண்டவர்:

85

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுடனும் அன்பு கொண்டவர் என்று ஆளுனர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.

 அரச நிறுவனத்தின் சிங்கள பத்திரிகையான தினமிண பத்திரிகையின் இன்றைய வெளியீட்டுக்கு அலவி மௌலானா வழங்கியுள்ள நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து  தெரிவித்துள்ள அவர்,

ஜனாதிபதி நாட்டின் அனைத்து இன மக்கள் தொடர்பிலும் கரிசனை கொண்டவர்.

அனைவரையும் சரிசமமாக நடத்தும் எண்ணம் கொண்டவர். அவரது ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக நடத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு அவர் சரிசமமான உரிமைகளை வழங்கியுள்ளார். ஒரே மாதிரியான அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளார்.

தற்போது வடக்கு- கிழக்கு பிரதேச மக்களின் வாழ்க்கை  தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்துக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு- செலவுத்திட்டத்திலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு நலனை விட கட்சியின் நலன் முக்கியம்.

நாட்டு மக்களை விட அவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தான் கரிசனை கொண்டிருப்பார்கள் என்றும் ஆளுனர் அலவி மௌலானா தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszBSZKYlv2.html#sthash.tXMwEGqQ.dpuf

SHARE