ஆஸ்திரேலியா அருகே ரஷ்ய போர்க் கப்பல் ரஷ்யாவுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!

156

 

 

கேன்பெரா,: ஆஸ்திரேலியா அருகே போர்க் கப்பல்களை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் கூறுகையில், “ஆஸ்திரேலிய கடல் பகுதி அருகே 4 ரஷ்ய கப்பல்கள் தென்படுகின்றன. அதில் நவீனரக போர் ஆயுதங்களை கொண்ட போர்க் கப்பலும் உள்ளது’’ என்று கூறியுள்ளார். 

 
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆற்றிய உரையில், “ரஷ்யாவின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள விவகாரத்தில், ரஷ்யா நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட் டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். 

சிறிய நாடுகளை அச்சுறுத்தும் போக்கை, ரஷ்யா நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார். உக்ரைன் கிளர்ச்சியாளர்களால், மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதில் இருந்து, இங்கிலாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவில் விரிசல், அதிகரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் ரஷ்யாவுக்கு பங்கு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதில், 298 பேர் கொல்லப் பட்டனர். அவர்களில், 38 பேர் ஆஸ்திரேலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE