முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

167

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.

யுத்தம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர். இவாறான சட்டவிரோத பயணத்தில் சில அமைச்சர்களும், கடற்படை அதிகாரிகளும் தொடர்புபட்டிருந்தனர் எனவும் தெரியவந்தது.

இந்நிலையில் மீண்டும் தமிழர்களை நாட்டை விட்டு விரட்டும் ஒரு சதியாகவே இது உள்ளது. இதை ஆஸ்திரேலிய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

 

SHARE