காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு இணையத்தள ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

157
எக்னேலியகொட பற்றி விசாரணை கோரும் இணையத்தள ஊடகவியலாளர்கள்
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு இணையத்தள ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணையத்தள ஊடகவியலாளர்களின் சங்கத்தின் பிரதானிகள், அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ரத்வத்தே, ஆகியோரை சந்தித்த போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

கோரிக்கை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

லங்கா ஈ நியூஸ் இணைத்தளத்தில் பணியாற்றி கொண்டிருந்த நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட காணாமல் போனார்.

அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்டதன் காரணம் அவர் கடத்தி  செல்லப்பட்டு, காணாமல் போக செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszBSZKYko5.html#sthash.eZJSXjY0.dpuf

SHARE