பேய்களாக மாறிய ஐ.எஸ்.ஐ.எஸ் – ஒபாமா கண்டனம்

116

அமெரிக்க உதவிப் பணியாளர் அப்துல் ரஹ்மான் கசீக், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி பரக் ஒபாமா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கசீக் கொலை செய்யப்பட்டமை முற்றாக பேய்யின் செயற்பாடு எனவும் ஒபாமா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கசீக் உடையது என தெரிவிக்கப்படும் தூண்டிக்கப்பட்ட தலையொன்றுடன் ஆயுததாரி ஒருவர் தோன்றும் காட்சி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட தலை கசீக் உடையது என்பதை அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை சிரிய மக்களின் மீதுள்ள அன்பினால் தனது மகன் உயிர்தியாகம் செய்துள்ளதாக கசீக்கின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

26 வயதான கசீக் அகதிகளுக்கான குழுவொன்றுக்காக பணியாற்றிக்கொண்டிருந்த போது கடந்த ஆண்டு கடத்தப்பட்டிருந்தார்.

SHARE