ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கஷ்டம் – கங்குலி

119

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கடினம் என முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் குவித்தது மிகவும் அபாரமான ஒன்றாகும். கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உண்மையிலேயே இது நம்ப முடியாத ஒன்றாகும்.

ரோஹித் சர்மாவின் 264 ஓட்டங்கள் சாதனையை முறியடிப்பது கடினமானது. எந்த நேரத்திலும் இந்த சாதனையை முறியடிக்க இயலாது என்று கங்குலி கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 264 ஓட்டங்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் மற்றும் இருமுறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை ரோஹித் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE