அவுஸ்திரேலியாவை திணறடித்த தென் ஆப்பிரிக்கா

119

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தவறியமையால், அவ்வணி 41.4 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மார்ஷ் 67 ஓட்டங்களை பெற்றார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்கல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி 27.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 5 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக மார்னே மார்கல் தெரிவானார்.

SHARE