ஊவா மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

128
ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பயணித்த டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானது.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

SHARE