முதன்முறையாக முதலிடத்தில் அஞ்சலோ மேத்யூஸ்

150

சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

அதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரப்படுத்தலில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹசிப் இரண்டாம் இடத்திலும், பங்களாதேஷ் அணியின் ஷகிப் ஹல் ஹசன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளார். இலங்கை அணியின் டி.எம்.டில்ஷான் ஐந்தாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் இரண்டு முறை இரட்டைச்சதம் அடித்து உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா, 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷிகர் தவான் ஐந்தாவது இடத்திலும், டோனி ஏழாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

இலங்கை அணியின் லஹிரு திரிமன்னே நான்கு இடங்கள் முன்னேறி 46வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் எட்டாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா பத்தாவது இடத்திலும் உள்ளனர். அஸ்வின் 15வது இடத்தைப் பிடித்துள்ளார்.

SHARE