யாழில் 14 ஆலயங்களில் பூஜை வழிபாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார்.

169
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் ஜனாதிபதி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இதில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி மற்றும் கௌரவ அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்பிரகாரம் ஜனாதிபதி அவர்களை வாழ்த்தியும் நல்லாசி வேண்டியும் ஆலய பிரதம குரு துரைச்சாமி குருக்கள் தலைமையில் இச்சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதேவேளை மட்டக்களப்பு மாமாங்கேஸ்ர் ஆலயத்தில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவிப்பிரமாணம் மற்றும் நாட்டுக்கும் முப்படையினருக்கும் ஆசி வேண்டி திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பிரார்த்தனை நேற்று இரவு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி திஸ்ஸ ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் திருமலை ஸ்ரீ ஜயசுமனராம விகாரையில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி மட்டக்களப்பில் ஆலயங்களில் வழிபாடுகள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 68வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று வருவதுடன் மரநடுகை திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆசிவேண்டி பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற ஆலயமான களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்து கொண்டார்.

அத்துடன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சனத் நந்தலால் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெருமளவான பொதுமக்கள்,கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியின் பிறந்த தின நினைவாக கலந்து கொண்டவர்களினால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

யாழில் 14 ஆலயங்களில் பூஜை வழிபாடு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 69ஆவது பிறந்தநாள் மற்றும் பதவியேற்ற நாளை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வாழ்வு சுபீட்சம் பெறவும் பணிகள் சிறக்கவும் இன்றைய தினம் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் 14 ஆலயங்களில் பூஜை வழிபாடுகளும் அன்னதானமும் இன்னும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ் மாவட்டத்தில் உள்ள செல்வ சந்நிதி முருகன் கோவில், கச்சாய் அம்மன் கோவில் (சாவகச்சேரி), மூளாய் பிள்ளையார் கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில், தம்பட்டி ஆம்மன் கோவில் ( நராந்தனை), கைலாசப்பிள்ளையார் கோவில், (யாழ்ப்பாணம்) கோண்டாவில் பேருந்து நிலையம் துன்னாலை கலிகை முருகன் கோவில், கீரிமலை சிவன் கோவில், அரியாலை வேதாவியார் கோவில், வேவில் பிள்ளையார் கோவில் (வல்வெட்டித்துறை), நாகவிகாரை நயீனா தீவு, கிளிநகர் சித்திவிநாயகர் ஆலயம் போன்ற ஆலங்களுக்கு விஜயம் செய்ததுடன் அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டார்.

 

SHARE