காணாமல் போன ஹோண்டுராஸ் நாட்டு அழகி

155

உலக அழகிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள மிஸ் ஹோண்டுராஸ் அழகி மரியா ஜோஸ் அல்வர்டோ, அவரது சகோதரி சோபியா டிரினிடா ஆகிய இருவரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 வயதான மரியா, சான்டா ரோசா டி கோபன் என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஏப்ரல் 26ம் திகதி நடந்த மிஸ் ஹோண்டுராஸ் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் ஆவார்.

அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள 2014ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் இவர் பங்கேற்கவிருக்கின்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இந்தத் தகவலை மிஸ் ஹோண்டுராஸ் வேர்ல்ட் அழகிப் போட்டிக்கான மேலாளர் எடுவர்டோ சப்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை அன்று, மேற்கு ஹோண்டுராஸின், சான்டா பார்பரா நகரில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தான் இவர்கள் இருவரையும் காணவில்லை. தற்போது இது தொடர்பாக பொலிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE