கனடாவில் தரையிறங்கிய உலகின் பிரம்மாண்ட விமானம்

123

உலகின் மிகப் பெரிய விமானம் ஒன்று நேற்று கனடாவில் தரையிறங்கியுள்ளது.

பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானம் ரஷ்ய விண்வெளி ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்றிக் தொன் எடையினை தூக்கியவாறு மேலெழும் வல்லமை உள்ளது.

விமானத்தின் முன் பகுதியில் இருந்து வால் பகுதி வரையிலான நீளத்தினை ஒப்பிடும் போது சுமார் ஒரு காற்பந்து திடலின் நீளத்தினை ஒத்திருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த விமானம் லேபடோருக்கு செல்லும் வழியில் நேற்று ரொறன்ரோ பியர்சன் (pearson)விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

SHARE