குமுறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

82

சயீட் அஜ்மலின் பந்துவீச்சு பலவித பயிற்சிகளுக்கு பிறகும் சர்வதேச போட்டிகளில் வீசும் அளவுக்கு சரியானதாக வரவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் சர்வதேச விதிமுறைகளுக்கு புறம்பாக பந்து வீசுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலவித முயற்சிகளை எடுத்தது. இதற்காக பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஷ்டாகை பயிற்சியாளராக நியமித்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட `பயோ மெக்கானிக்கல்’ சோதனை படி, அஜ்மலின் பந்து வீச்சில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஆனால் அவர் சர்வதேச போட்டிகளுக்கு பந்து வீசும் அளவுக்கு இல்லை எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE