இராணுவ பலத்தால் மட்டுமே ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க முடியாது.

138

 

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி நரகத்துக்குச் செல்வார் என சன்னி பிரிவினரின் மூத்த மதத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி.

 

தனி நாட்டை பிரகாடம் செய்த இந்த அமைப்பு அதற்கு அல்பாக்தாதியை கலிபாவாக அறிவித்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

 

இதுகுறித்து சன்னி பிரிவின் மூத்த மதத் தலைவர் சயூக் முகமது (Sayuk Mohammed) கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதத்தின் கொடூர முகம். அந்த அமைப்பு அழிக்கப்பட வேண்டும்.

 

இராணுவ பலத்தால் மட்டுமே ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க முடியாது. அதில் இளைஞர்கள் சேருவதை தடுத்தால் தானாகவே அவ்வமைப்பு காணாமல் போய்விடும்.

 

இளைஞர்களை தவறான வழியில் நடத்தும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்பாக்தாதி இருக்க தேவையில்லை. அவர் இறந்தாலும் கட்டாயம் நரகத்துக்கு தான் செல்வார் என சபித்து கூறியுள்ளார்.

 

மேலும் ஒரு காலத்தில் யூதர்கள், கிறிஸ்துவர்கள், ஷியா மற்றும் சன்னி பிரிவின இஸ்லாமியர்கள் அமைதியாக இருந்த சிரியா, தற்போது உள்நாட்டு போரினால் சீர்குலைந்துள்ளது என்றும் இந்த விவகாரம் குறித்து உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

)

SHARE