ரம்யா திடீர் நீக்கம் இயக்குனர் தடாலடி 

92 ரம்யாவை நீக்கிவிட்டு ராகினி திவேதியை ஒப்பந்தம்  செய்கிறார் இயக்குனர்.’குத்து’ ரம்யா அரசியலுக்கு வருவதற்கு முன்  ஒப்புக்கொண்ட கன்னட படம் ‘நீர் டோஸ்’. இதில் அவருக்கு நெகடிவ்  கதாபாத்திரம். அரசியலுக்கு வந்தபிறகு இதுபோன்ற வேடத்தில்  நடித்தால் தனது பெயர் கெட்டுவிடும் என்று தயங்கினார். திடீரென்று  படத்திலிருந்து விலக முடிவு செய்தார். அவரை வைத்து சில  காட்சிகளை படமாக்கிய இயக்குனர் விஜய பிரசாத் இதையறிந்து  அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த  விஜயபிரசாத், ‘நீர் டோஸ் படத்தின் ஷூட்டிங் ரம்யா பிரச்னையால்  தடைபட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக ராகினி திவேதி நடிக்க  உள்ளார். அதன்பிறகு  ஹீரோயின் நடிக்கும் காட்சிகளை மீண்டும்  படமாக்க உள்ளேன்’ என்பதை தெரிவித்தார். கோர்ட்டில் வழக்கு  இருப்பதால் இதுபற்றி இப்போதைக்கு விரிவாக பேச முடியாது என்றும்  அவர் கூறினார். ரம்யாவிடம் கேட்டபோதும் வழக்கு இருப்பதால் இது  பற்றி பேச முடியாது என்றார்

 

SHARE