அந்தரங்கத்தில் தலையிடாதீங்க: இலியானா கோபம் 

100 ‘கல்யாணம் ஆகும் வரை நான் தனி ஆள்தான்’ என்றார்  இலியானா.பாலிவுட் ஹீரோயின்கள் பாய்பிரண்டுடன் டேட்டிங்  செல்வதை பேஷனாக கொண்டுள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில்  நடித்தவரை தனியாக வலம் வந்துக்கொண்டிருந்த இலியானா பாலிவுட்  சென்றதும் அந்த பாணிக்கு தன்னை மாற்றிக்கொண்டார்.  ஆஸ்திரேலியா வாலிபர் ஆண்ட்ரூ நி போன் என்பவரை தனது  பாய்பிரண்ட் என்று அறிமுகம் செய்துகொண்டார் இலியானா.  அவருடன் ஜோடி போட்டு சுற்றுவதுடன் படப்பிடிப்பு தளங்களுக்கும்  உடன் அழைத்து வருகிறார். சயீப் அலிகானுடன் ஜோடியாக நடிக்கும்  ‘ஹேப்பி எண்டிங்’ பட ஷூட்டிங்கிற்கு அவர்கள் ஜோடி சேர்ந்து  வந்தனர். அதைப்பார்த்த இயக்குனர் ஆண்ட்ரூவை கெஸ்ட் ரோலில்  நடிக்க வைத்தார்.

வெளிப்படையாக டேட்டிங் செய்யும் இலியானாவிடம் இருவருக்கும்  காதலா என்று கேட்டால் கோபப்படுகிறார். ‘என்னுடைய சொந்த  வாழ்க்கைபற்றி எத்தனை முறை நீங்கள் (நிருபர்கள்) கேட்டாலும் நான்  பதில் சொல்ல மாட்டேன். கல்யாணம் ஆகும்வரை நான் தனி  ஆள்தான். சொந்த வாழ்க்கையை அந்தரங்கமாக வைத்திருக்கவே  விரும்புகிறேன். என்னுடைய குடும்பத்தினருக்கு என் விஷயம்பற்றி  தெரியும்வரை எந்த பிரச்னையும் இல்லை. அது எனக்கு போதும்.  ஒவ்வொருவரும் என்னுடைய சொந்த விஷயத்தைபற்றி  தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை’ என்றார்

 

SHARE