அரச குடும்பத்தை விமர்சித்த பார்வையற்ற பெண்ணுக்கு சிறை.!

தாய்லாந்தில் அரச குடும்பத்தை விமர்சனம் செய்த பார்வையற்ற பெண்ணுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் வசித்து வரும் நுகுர்கயாதி மோஷி என்னும் 23 வயது பெண், தாய்லாந்து அரச குடும்பம் குறித்த செய்தியை ஆடியோ மூலம் கேட்டுள்ளார்.

அதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் விமர்சனம் செய்து எழுதிய அப்பெண்ணின் பதிவு வைரலாகியதை தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் அரச குடும்பம் குறித்து விமர்சனம் செய்வது கடுமையான குற்றம் என்பதால் அப்பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தனது தவறு குறித்து வருந்துவதாக குறித்த பெண் நீதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இன்று மறுதீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, குறித்த பார்வையற்ற பெண் மீது பரிதாபப்படுவதாகவும் அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லாததால் குறைந்தபட்சமாக 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தான் தவறு செய்து விட்டதாக மன்னிப்பு கோரியும் பார்வையற்ற பெண்ணுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்