குளிர்சாதனப் பெட்டியில் பிஞ்சு குழந்தைகள் உடல் இளம் தாயாரின் கொடூர செயல்.!

உக்ரைனில் குடியிருப்பு ஒன்றில் குளிர்சாதனப் பெட்டிக்குள் உயிருடன் மறைக்கப்பட்ட நிலையில் 2 பிஞ்சு குழந்தைகளின் உடலை பொலிசார் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் இளம் தாயார் ஒருவர் பிரசவத்திற்கு பின்னர் மிகவும் ஆபாத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் பிறந்த குழந்தைகள் தொடர்பில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பதில் ஏதும் கூற மறுத்துள்ளதை அடுத்து சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண்மணியின் குடியிருப்பில் சென்று சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது சமையலறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் உள்ளறையில் உறைந்த நிலையில் இரு குழந்தைகள் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டது.

அதில் ஒரு குழந்தை ஓராண்டாக குளிர்சாதனப் பெட்டியில் இருந்துள்ளது ஆய்வில் தெரிய வந்தது. மட்டுமின்றி இன்னொரு குழந்தையானது பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆனதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து 34 வயதனாத அந்த இளம் தாயார் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் மேற்கொண்டு விசரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்மணிக்கு மேலும் 3 குழந்தைகள் உள்ளனர். மட்டுமின்றி பிறந்த குழந்தைகளை அவர் ஏன் குளிர்சாதப் பெட்டிக்குள் மறைவு செய்தார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது

About Thinappuyal News