2018ஆம் ஆண்டு புறப்பட்ட விமானம் 2017யில் தரையிறங்கிய அதிசயம்.!

நியூசிலாந்து நாட்டில் இருந்து 2018 புத்தாண்டு தினத்தன்று புறப்பட்ட ஹவாயியன் எனும் விமானம் 2017ஆம் ஆண்டில் தரையிறங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதலில் 2018ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இருந்து ஹவாயியன் ஏர்லைன்-446 என்னும் விமானம் புறப்பட்டது.

இந்த விமானம் அமெரிக்காவின் ஹவாய் தீவைச் சென்றடைந்தபோது, அன்றைய தினம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மற்றும் நேரம் இரவு 10.15 ஆகும். இதற்கு காரணம் கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாடே ஆகும்.

மேலும், நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுக்கு இடையே சுமார் 23 மணி நேரம் கால இடைவெளி இருந்ததால் இச்சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக ஹவாயியன் விமானம் டிசம்பர் 31ஆம் திகதி, இரவு 11.55 மணிக்கு ஆக்லாந்தில் இருந்து புறப்பட இருந்தது.

ஆனால் 10 நிமிடம் காலதாமதம் ஆனதால், புத்தாண்டு பிறந்து 5வது நிமிடத்திலேயே, அதாவது 2018ஆம் ஆண்டு இரவு 12.05 மணிக்கு புறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ‘இது காலங்களுக்கு இடையேயான பயணம்’ என தெரிவித்துள்ளார்

About Thinappuyal News