தைப்பொங்களை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு.!

தைப்பொங்களை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அத்தியட்சகர் சரத் வல்கம்பாயே கூறியுள்ளார்.

கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய 83 மேலதிக பஸ்கள் கொழும்பிலிருந்து வௌி மாவட்டங்களுக்கு இன்று செல்லவுள்ளன.

இதேவேளை, நாளைய தினம் 156 பஸ்களும், சனிக்கிழமை 124 பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 83 பஸ்கள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 52 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் சரத் வல்கம்பாயே கூறியுள்ளார்.

இதேபோன்று தைப்பொங்களின் பின்னர் கொழும்பு நோக்கி வருவதற்கான விசேட பஸ்சேவைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பஸ்சேவைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுமாயின் 011 2 555 555 என்ற இலங்கை போக்குவரத்து சபையின் துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் சரத் வல்கம்பாயே சுட்டிக்காட்டியுள்ளார்.

About Thinappuyal News