சிலாபத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது.!

சிலாபம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யவதற்காக மாதம்பே பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பே பகுதியில் நீண்ட காலமாக இடம் பெருகின்ற சட்டவிரோதமாக மணல் அகழ்வினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

பிரதேச மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 9 டிப்பர் வண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று சிலாபம் நீதிமன்றத்தில் ஈடுப்டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About Thinappuyal News