சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தர வரிசையில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வருட ஆரம்பத்தின் போது 10ஆவது இடத்தில் இருந்த தினேஸ் சந்திமால், புதிய சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 743 புள்ளிகளை பெற்று 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை இந்த தரவரிசைப் பட்டியலில் 947 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.

இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் 881 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் விராட் கோஹ்லி 880 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.