ரசிகனின் காலில் விழுந்த சூர்யா, யார் செய்வார்கள் இதை, நெகிழ்ச்சி வீடியோ இதோ

சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.

இதை சூர்யா உடைக்கும் வகையில் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இவை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது. இதோ அந்த வீடியோ…