பிக்பாஸ் புகழ் ஜுலி நடித்த படத்திற்கு வந்த புதிய சிக்கல்

பல பேர் தங்களது திறமையால் சினிமாவிற்குள் வருகிறார்கள். அப்படி ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மோசமான பிரபலம் அடைந்து தற்போது படங்களில் நடித்து வருபவர் ஜுலி.

இவர் விரைவில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. தற்போது அவர் விமல் நடித்திருக்கும் மன்னார் வகையறா என்ற படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.

வரும் பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வெளியாக இருக்கிறது என்று நிறைய விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஆனால் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதால் பொங்கல் ரேஸில் இருந்து படம் விலகியுள்ளது.

அதோடு படம் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.