பொங்கல் ரேஸிலிருந்து விலகி போன முக்கிய படம்!

தமிழர் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் 4 முக்கிய படங்கள் ரிலீஸாக இருந்தது. இதில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச், பிரபு தேவா நடித்திருக்கும் குலேபகாவலி ஆகியன உறுதியாகிவிட்டது.

இதில் விஜய்காந்த் மகன் சண்முகவேல் நடித்திருக்கும் மதுரவீரன் படத்தை தற்போது தள்ளிவைத்துள்ளார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பொங்கலை குறிவைத்து வெளியாக இருந்தநிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெரிய ஹீரோக்களின் படங்களால் இப்படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் படத்தை வரும் ஜனவரி 19 ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

About Thinappuyal News