உருக்கமான எஸ்.எம்.எஸ் அனுப்பியதால் தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர்..

111

சென்னை: ரமேஷ் ரங்கசாமி இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா’. இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியது: பொங்கி எழு மனோகரா என்பது பிரபலமான வசனம். அந்த வசனம் என் வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்தது. நான் கஷ்டப்பட்டபோது உடன்பிறந்தவரிடம் உதவி கேட்டேன். செய்ய மறுத்தனர். அப்போது என் மனதில் பொங்கி எழு மனோகரா என்ற வசனம்தான் தோன்றியது. அப்போதுதான் இந்த கதை உருவானது. அந்த வசனத்தை பட தலைப்பாக்கினேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நான் அடி வாங்கி இருக்கிறேன். என்னை உருட்டிவிட்டு அடித்திருக்கிறார்கள்.

 அந்த அனுபவம் என்னை சிறந்த பட இயக்குனராக வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. பொங்கி எழு மனோகரா படத்தை பொறுத்தவரை பால்காரன் ஒருவனின் வாழ்வில் நடக்கும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எனது வாழ்க்கை அனுபவங்களும் காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை தயாரிக்கவேண்டும் என்று எனது தயாரிப்பாளருக்கு உருக்கமான எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதற்கு பதில் வராமலிருந்திருந்தால் இந்நேரம் நான் ஊருக்கு கிளம்பி இருப்பேன். நல்லவேளையாக படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசை அமைத்திருக்கிறார்.

SHARE