இங்கிலாந் இலங்கை ‘ஏ’ அணியை வீழ்த்தியது

133
 

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கை ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2 பயிற்சிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் பயிற்சி போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.

துடுப்பாட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணியின் சார்பில் குசல பெரேரா 56 ஓட்டங்களையும், ஜூவன் மெண்டிஸ் 42 ஓட்டங்களையும் எடுக்க, பிரியஞ்சன் 31, ரம்புக்வெல 30 மற்றும் டிக்வெல 17 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில், மொயீன் அலி 3 விக்கெட்களையும், ஸ்டீபன் 2 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இங்கிலாந்து 25 ஓவர் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வேர்த் லூயிஸ் முறையில் போட்டி முடிவு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இங்கிலாந்து டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியின் சார்பில், முகமட் அலி 56 ஓட்டங்களையும், குக் 54 ஓட்டங்களையும் எடுக்க, பெல் மற்றும் ரூட் ஆகியோர் முறையே 16 மற்றும் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

SHARE