அவுஸ்திரேலிய ரசிகர்களும் கோஹ்லியை குறிவைக்க ஆரம்பித்து விட்டனர்.

131
இந்தியா அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல தயாராகும் நிலையில், கோஹ்லியை அவுஸ்திரேலிய ஊடகங்களும், ரசிகர்களும் குறி வைக்க ஆரம்பித்து விட்டனர்.இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ம் திகதி காப்பாவில் நடக்கிறது. காயம் காரணமாக அணித்தலைவர் டோனி முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.

இதனால் முதல் போட்டியில் கோஹ்லி அணித்தலைவராக விளையாடவுள்ளார். அதே சமயம் கோஹ்லியை அவுஸ்திரேலிய ரசிகர்களும், ஊடங்களும் குறி வைக்க தயாராக உள்ளன.

இதற்கு முன்பு சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய ரசிகர்களால் கேலிக்கு உள்ளான கோஹ்லி, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது நடுவிரலை காட்டினார்.

அவுஸ்திரேலிய ரசிகர்களின் கிண்டல், கேலி பற்றி அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஒருவர் கூறுகையில், காப்பா ஆடுகளம் வெளிநாட்டு வீரர்கள் விளையாட மோசமான ஆடுகளம்.

அங்கு கூடும் ரசிகர்கள் மோசமானவர்கள். கண்டிப்பாக சிட்னியில் கோஹ்லி செய்த செய்கையை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவருக்கு சிக்கல் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதே போல், டெஸ்ட் தோல்விகளை பற்றி இந்திய அணி கவலைப்படாது. அவர்கள் எண்ணம் எல்லாம் உலகக்கிண்ணம் பற்றி தான் உள்ளது.

ஒரு வேளை அதையும் தாண்டி அந்த அணி சிறப்பாக செயல்பட்டால் அணித்தலைவருடைய காதலி மகிழ்ச்சி அடைவார். இது தான் நடக்கும் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று விமர்சனப்படுத்தியுள்ளது.

வருகின்ற 4ம் திகதி காப்பா டெஸ்ட் போட்டியில் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது.

SHARE