பொலன்னறுவை மாவட்டம் பூராகவும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட்கள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளது.

139

பொலன்னறுவை மாவட்டம் பூராகவும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட்கள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளது.

628x471

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நண்பகல் பொலன்னறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும், வேறு மாவட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட பொலிசாரும் பொலன்னறுவையில் இதுவரை நிலைகொண்டுள்ளனர்.

எனினும் இவர்களைக் கண்டு அஞ்சாமல் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் பகிரங்கமாக களமிறங்கி ஜனாதிபதியின் கட்-அவுட்களை அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் பொலன்னறுவைக்கான தனது விஜயத்தை ரத்து்ச் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் பின்னர் அங்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

 

SHARE