தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்:

117
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை வாக்களிப்பில் பங்கேற்கச் செய்யாமல் தடுத்தே ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொள்ளப்பட்டது.

தேர்தல் வெற்றியின் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரம் தேவையெனக் கூறி படிப்படியாக அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

போரின் பின்னர் அதிகாரங்கள் குறைக்கப்படும் என குறிப்பிட்டார்.

எனினும், போரின் பின்னர் தமக்கு எதிராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தார்.

ஊடக சுதந்திரத்தை ஜனாதிபதி முடக்கினார்.

பிரதம நீதியரசரை குற்றப் பிரேரணை மூலம் பணி நீக்கினார்.

எமது கட்சியை சிதைக்க முயற்சித்தார், அது முடியவில்லை, எனினும் ஏனைய கட்சிகளை பிளவடையச் செய்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய எவரும் ஆதரவளிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

தோல்வியடையப் போகின்றோம் என்ற அச்சம் காரணமாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய ஆதரவளிக்கத் தயார். அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றில் 19ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கத் தயார்.

அவசர சட்ட மூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பித்து விவாதம் நடத்தி, சட்டத்தை அமுல்படுத்த முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

SHARE