தென்கொரிய மக்கள் தொகை: 2015-ல் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்

129
வரும் 2015-ஆம் ஆண்டில் தென் கொரியா, மக்கள் தொகையில் மிகப்பெரிய மாற்றத்தை அடையப்போகிறது. அந்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை 25.3 மில்லியனாக இருக்கும் என்றும், அதை விட ஒரு படி மேலாக 25.31 மில்லியனாக பெண்களின் எண்ணிக்கை இருக்கும் என அந்நாட்டு தகவல் நிறுவன புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்நாட்டில் இயற்கையாகவே பெண்களின் ஆயுட்காலம் அதிக அளவில் இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் வயதானவர்கள் அதிகம் வாழும் நாடு என்ற பெயரும் தென் கொரியாவுக்கு கிடைக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2026-ல் அந்நாட்டில் வாழும் 20 சதவிகித மக்கள் 65 வயதை கடந்து சாதனை படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE