பிளாஸ்­டிக்கில் காணப்­படும் பால்­நிலை மாற்­றத்­திற்கு வித்­தி­டு­வதும் இன­வி­ருத்தி ஆற்­றலைப் பாதிப்­பதும் மார்பு மற்றும் விதைப்பை புற்­று­நோய்க்கு கார­ண­மா­ன­து­மான இர­சா­யனம் 86 சத­வீத இள­வ­ய­தி­னரின் உடலில் இருப்­பது புதிய பிரித்­தா­னிய ஆய்­வொன்றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

1960 களி­லி­ருந்து குறிப்­பிட்ட பிளாஸ்­டிக்கை உரு­வாக்கப் பயன்­படும் பைபீனோல் ஏ (பி.பி.ஏ.)  என்ற மேற்­படி இர­சா­யனம் தண்ணீர் போத்­தல்­க­ளிலும் பிளாஸ்டிக் கொள்­க­லன்­க­ளிலும் உணவுப் பொருட்­களை அடைக்கப் பயன்­படும்  தகர கொள்­க­லன்­க­ளுக்­குள்ளும்  உணவு பரி­மா­றப்­படும் பிளாஸ்டிக் தட்­டு­க­ளிலும் பிளாஸ்டிக்  கிண்­ணங்­க­ளிலும் பொது­வாகக் காணப்­ப­டு­கி­றது.

பெண்­களின் பாலியல் ஹோர்­மோ­னான ஈஸ்ட்­ரோ­ஜென்னைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் இந்த இர­சா­யனம் ஆண்­களில் விந்­த­ணுக்கள் குறை­வது மற்றும் இன­வி­ருத்தி ஆற்றல் இழப்­பது என்­பனவற்றை ஏற்­ப­டுத்­து­வ­துடன் விதைப்பை புற்­று­நோய்க்கும் கார­ண­மா­கி­றது. அதே­ச­மயம் மேற்­படி இர­சா­யனம் பெண்­களில் மார்புப் புற்­று­நோயை  ஏற்­ப­டுத்­து­கி­றது.

பிரித்­தா­னிய எக்­ஸெட்டர் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­களால் மேற்கொள்­ளப்­பட்ட மேற்­படி ஆய்­விற்­காக 94  இள­வ­ய­தி­ன­ரது  சிறுநீர் மாதி­ரிகள் பெறப்­பட்டு ஆய்வு செய்­யப்­பட்­டது.

இதன் போது ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் 86  சத­வீ­த­மா­ன­வர்­களின் சிறு­நீரில் பைபீனோல் ஏ இர­சா­யனம் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

உணவுப் பொருட்கள் பிளாஸ்­டிக்கில் அடைக்­கப்­ப­டு­வது என்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரித்­துள்ள நிலையில் இந்த  இர­சா­யனம் மக்­க­ளது உடலில் சேர்­வதை தடுப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாக  மாறி­யுள்­ள­தாக நிபு­ணர்கள் அச்சம் வெளி­யிட்­டுள்­ளனர்.

இது தொடர்பில் இந்த ஆய்வில் பங்­கேற்ற மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­துவ பாட­சா­லையைச் சேர்ந்த பேரா­சி­ரியர் லோர்னா ஹரிஸ் தெரி­விக்­கையில், “உலகில்  பெரும்­பா­லான மக்கள் தின­சரி பைபினோல் ஏ இர­சா­ய­னத்தை உள்ௌடுத்து வரு­கின்­றனர். தற்­போ­துள்ள சட்­டங்­களின் பிர­காரம் இந்த இர­சா­யனம் எமது உணவில் சேர்­வதை தவிர்ப்­பது கடி­ன­மா­ன­தா­க­வுள்­ளது.  உணவுப் பொதி­யிடல் முறை­களில் எவை  அந்த இர­சா­ய­னத்தைக் கொண்­டி­ருக்­கின்­றன என அடை­யாளம் காண்­பது சிர­ம­மா­க­வுள்­ளது” என்று  கூறினார்.

பைபீனோல் ஏ இர­சா­யனம் மனித உட­லுக்கு பெரும் தீங்கை விளை­விக்கக்கூடி­யது என ஐரோப்­பிய இர­சா­யன முகவர் நிலையம் ஏற்­க­னவே எச்­ச­ரித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிளாஸ்­டிக்கை கடி­ன­மாக்கப் பயன்­படும் அந்த இர­சா­யனம் நீரி­ழிவு மற்றும்  இரு­தய நோய்­களை ஏற்­ப­டுத்தக் கூடி­யது என அந்த முகவர் நிலையம் கூறு­கி­றது.

மேற்­படி இர­சா­யனம் பற்­றுச்­சீட்­டுகள், மூக்குக் கண்­ணா­டிகள் மற்றும் இறு­வட்டு  பெட்­டிகள் என்­ப­வற்­றிலும் காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.