ஸ்ருதி-சமந்தாவுடன் போட்டி : தமன்னா எடுபடுவாரா? 

100


 சமந்தா, ஸ்ருதியுடன் தமன்னா போட்டி எடுபடுமா என கோலிவுட்டில் பட்டிமன்றம் நடக்கிறது.தமிழில் டாப் ஹீரோக்களுடன் நடித்தவர் தமன்னா. கடந்த 2 வருடத்துக்கு முன் கோலிவுட்டில் நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தெலுங்கில் மட்டும் நடித்து வந்தார். 2011ம் ஆண்டு தமிழில் அவர் நடிப்பில் ‘சிறுத்தை‘ திரைக்கு வந்தது. அதன்பிறகு தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘வீரம்‘ படத்தில் அஜீத்துடன் நடித்தார். பிறகு இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார்.

இதற்கிடையில் சமந்தா, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா தமிழ் படங்களை ஆக்கிரமித்தனர். விஜய், சூர்யாவுடன் இவர்கள் ஜோடி சேர்ந்து வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கில் தமன்னாவுக்கு இதே நடிகைகள்தான் பலத்த போட்டியாக உள்ளனர். தமிழில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் தமன்னா இவர்களின் போட்டியை ஒரு கை பார்ப்பது என்று கங்கணம் கட்டி களம் இறங்கி இருக்கிறாராம். ஆர்யாவுடன் புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் தமன்னா. ராஜேஷ் இயக்குகிறார்.  ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் தமன்னா தற்போது அதிரடி கவர்ச்சியில் கலக்கிகொண்டிருக்கும் ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதியை கோலிவுட்டில் சமாளிப்பாரா? மாட்டாரா? என்று ஒரு பட்டிமன்றமே கோலிவுட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது

 

SHARE