அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல் சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்

124
army_kili_001
அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல்  சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்

கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிழக்கில் மரக்கன்றுகள் வழங்கச் சென்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

வடமாகாண சபையால் பயன்தரு மரக்கன்றுகளை இன்று வழங்குவதற்கு வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சகிதம் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த இராணுவச் சிப்பாய்கள் மக்களையும் பா.உறுப்பினரையும் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டுள்ளனர்.

மக்களுக்கான ஒரு நற்காரியத்தில் பண்புகள் அற்று நடந்து கொள்ளக்கூடிய இராணுவத்தினரை கிராமங்களுக்குள் அரசாங்கம் ஈடுபடுத்தியிருப்பதுடன், மக்கள் பங்கு மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை அசிங்கப்படுத்தக் கூடிய வகையில் இராணுவச் சிப்பாய்கள் நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல்  சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்

உலகில் இயற்கையை வளம்படுத்துவது உன்னதமான செயல்- ஆனந்தபுரத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்

 

வடமாகாணசபையில் விவசாய அமைச்சு இம்மாதம் முழுவதையும் மரநடுகை மாதமாக பிரகடனம் செய்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக தினம் தோறும் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் ஏற்பாட்டில் பயன்தருமரக்கன்றுகளை கிராமங்களில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பணிமனையான அறிவகம் மக்களுக்கு வழங்கிவருகின்றது.

 

ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்ற மகுட வாக்கியத்தின் கீழ் மக்கள் ஆர்வமாக மரங்களை பெற்று தம் வளவுகளை வளம்படுத்திவருகின்றனர்.

 

இந்த வகையில் இன்று கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் மரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு இராணுச்சிப்பாய்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டபோதும் மக்கள் மரங்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றுள்ளனர்.

 

இந்த வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் விவசாய அமைப்புத்தலைவர் சிவமோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார் வன்னேரிக்குளம் பகுதி செயற்பாட்டாளர் மகேஸ் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

இதில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்

 

இன்று இந்த நாட்டில் நாம் எதற்கும் அனுமதி பெறவேண்டியவர்களாகவும் எவன் எவனுக்கோ பதில் சொல்ல வேண்டியவர்களாகவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை நாம் இங்கு இருக்கின்ற இராணுவப்பிரசன்னம் மூலம் உணரமுடியும்.

 

மரங்களை கொடுப்பதற்கும் அவர்கள் கேள்வி கேட்கின்றார்கள்.இது ஒன்றும் ஆச்சரியமல்ல அவர்கள் எங்களை அடிமைகளாக வைத்திருக்க நினைக்கின்றார்கள் அவ்வளவுதான்.

 

இதைத்தான் அவர்கள் கடந்த அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல் செய்கின்றார்கள்.சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

 

எனவேதான் நாம் என்றைக்கும் உரிமைக்காக போராடுகின்றவர்களாக நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.இந்த மாதமும் எமக்கு அதை உணர்த்துகின்ற மாதம்.

 

நாம் இன்று தந்திருகின்ற இந்த பயனதரு மரக்கன்றுகள் எமது வளவுகளை அழகு படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயற்கைக்கும் ஒரு உன்னதகாரியத்தை செய்கின்றவர்கள் ஆவோம்.

இந்த எமது சின்னஞ்சிறார்கள் நட்டு வளர்த்து வருகின்றபோது அவர்கள் மனதில் நம்பிக்கையும் பெருமிதமும் வளரும் எதிர்காலத்தில் இத்தகைய நற்காரியங்களுக்கும் எமது சந்ததி உந்தப்படும்.

மரங்கள் ஊடாகவும் எமது தாய் நிலத்தின் மீது எமது சந்ததிக்கு பற்றும் பாசமும் உண்டாகும் என நம்புகின்றோம் என்றார்.

 

SHARE