அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இறுதியாக நடைபெற்ற ஆஷஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சூதாட்டக்காரர்கள் இந்தமுறை ஆட்டநிர்ணய சதியில் இடம்பெற்றதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், பலர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் விசாரணை நடத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் எவையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.