இந்தியாவுடனான அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாட உள்ளார் என தென் ஆபிரிக்க கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின் போது டி வில்லியர்ஸ் காயமடைந்தார். இதையடுத்து, அடுத்த 3 ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், டு பிளசிஸ் மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு ஓய்வில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவுடனான அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாட உள்ளார் என தென் ஆபிரிக்க அணி கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காயம் குணமடைந்துள்ள நிலையில் டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால் அவர் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் விளையாடவுள்ளார் என தெரிவித்துள்ளது.