அதிக சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதிலும், பணத்தை விட புகழ்தான் பெரிது என சீன கிளப்பின் 15 கோடி ரூபாய் சம்பளத்தை நிராகரித்தார் மெஸ்ஸி.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக லயனல் மெஸ்ஸி திகழ்ந்து வருகிறார். ஆர்ஜென்ரீனா நாட்டைச் சேர்ந்த இவர், ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கிளப்பான பார்சிலோனாவிற்காக இளம் வயதில் இருந்தே விளையாடி வருகிறார். இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களான கருதப்படும் மூவர்களில் (கிறிஸ்ரியானோ ரொனால்டோ, நெய்மர்) மெஸ்ஸியும் ஒருவர்.

கடந்த வருடம் இறுதியில் பார்சிலோனா அணி மெஸ்ஸியுடன் ஓப்பந்தம் செய்து கொண்டது. அப்போது 2021 வரை மெஸ்ஸி தனது ஒப்பந்தத்தை நீட்டித்தார். அப்போது மெஸ்ஸிக்கான விலை சுமார் 600 மில்லியன் பவுண்ட் என பார்சிலோனா நிர்ணயித்தது.

இதற்கிடையே மெஸ்ஸி பார்சிலோனா உடன் ஒப்பந்தம் செய்து கொள்வாரா? என செய்தியும் உலாவியது. அப்போது ஏராளமான கிளப்புகள் மெஸ்ஸி விலை பேச விரும்பின.

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமான வீரர்களை எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்க சீனா சுப்பர் லீக்கில் விளையாடும் கிளப்புகள் தயாராக உள்ளன.