சர்க்கஸ் புலிக்கு உணவளித்த ஊழியர் இரண்டு கைகளையும் இழந்த துயரம்.!

குவாத்தமாலா நாட்டில் சர்க்கஸ் ஊழியர் ஒருவர் கூண்டில் அடைபட்டிருந்த புலிகளால் தாக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

Cipriano Alvarez என்ற 55 வயது ஊழியரே புலிகளால் தாக்கப்பட்டு தனது இரண்டு கரங்களையும் இழந்த நபர்.கூண்டில் அடைபட்டிருந்த புலிகளுக்கு குறித்த நபர் தண்ணீர் பக்கெட்டை நீட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புலிகள் குறித்த நபரின் கைகளை கவ்விப்பிடித்துள்ளது. இதில் உயிர் பயத்தால் அலறிய அவரை உள்ளூர் மக்கள் கற்களை வீசி புலிகளை விரட்டி காப்பாற்றியுள்ளது.

இதில் அவரது இரண்டு கைகளையும் புலிகள் கவ்விக்கொண்டு மறைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

குவாத்தமாலா நாட்டில் El Jocotillo என்ற கிராமத்தில் அமைந்துள்ள சர்க்கஸ் பந்தலில் பாதுகாக்கப்படும் 13 புலிகளை பராமரிக்கும் பணியை கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே Cipriano ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனால் கிடைக்கும் ஊதியத்தில் தமது குடும்பத்தினருக்கு உணவளிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுவாக புலிகளுக்கு நீளமான கொம்பால் உணவை வழங்கி வந்துள்ளனர். மட்டுமின்றி தொடர்ந்து இரண்டு நாட்கள் உணவளிக்கவும் 3-வது நாள் புலிகளை உணவின்றி பட்டிபோட்டும் அவர் வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று உணவு ஏதும் அளிக்காமல் வெறும் தண்ணீரை மட்டுமே வழங்கிய நிலையில் புலிகள் அவரது கைகளை தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

About Thinappuyal News