பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகள் கனடாவில் சம்பவம் ..!

கனடாவில் பெற்ற தாயை கொலை செய்த மகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.மொண்ட்ரியலில் தான் இச்சம்பவம் கடந்த மாதம் 28-ஆம் திகதி நடந்துள்ளது.

மெங் யீ (34) என்ற பெண் தனது 61 வயதான தாயுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று தனது தாயை கத்தியால் மெங் குத்தியுள்ளார்.

வலியை பொறுத்து கொண்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த பெண் அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து பொலிசார் மெங்-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.

இதனிடையில் மெங்-குக்கு மனநல கோளாறு இருப்பதாகவும், அவர் அடிக்கடி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார் எனவும் அவரின் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்

About Thinappuyal News