அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் கறுப்பு பணத்தை செலவிடும் மேற்குலகம்- டிலான் பெரேரா

129

நாட்டில் நிலையாக இருக்கும் அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.

Untitled174நாட்டில் ஆட்சியில் இருக்கும் நிலையான அரசாங்கத்தை கவிழ்க்க போதுமான கறுப்பு பணத்தை செலவிட மேற்குலக நாடுகள் தயாராக இருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நபர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் தகவல்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது.

தமக்கு அடிப்பணிந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க மேற்குலக நாடுகள் எதனையும் செய்ய தயாராக இருக்கின்றன.

நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தியேனும் ஆட்சி அதிகாரத்தை பெற எதிர்க்கட்சி எதனை வேண்டுமானாலும் செய்து வருகிறது.

ஐக்கிய தேசியக்கட்சி கரைந்து போயுள்ளதால், தலைவர்களை வேறு கட்சிகளில் இருந்து பலியாக எடுத்துக்கொள்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் முடிச்சுகளில் சிக்கியுள்ளார் எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

SHARE