சூப்பர் சிங்கர் புகழ் ஜெயந்திக்கு நடிகர் அர்ஜுன் கொடுத்த வாக்குறுதி- நெகிழ்ந்த அரங்கம்

உலகத்தில் நிறைய பேர் திறமைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்ட வழியில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் அப்படி திறமையுள்ள சில பேரை கண்டறிந்து சில தொலைக்காட்சிகள் அவர்களை உலகரிய செய்கின்றனர்.

அந்த வகையில் பிரபல பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜெயந்தி என்பவர் கலந்து கொண்டு பாடி வருகிறார். ஆனால் அவர் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் பாடி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற அர்ஜுன், உங்கள் குழந்தையில் படிப்பு சம்பந்தமாக எந்த உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் செய்கிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.