நாமலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்…!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதவானின் உத்தரவுக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு மற்றும் ரஷ்யாவில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக, நாமல் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிறிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல், வாங்கல் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News