வவுனியா கற்குளத்தில் சுயேற்சை குழு வேட்பாளர் மீது தாக்குதல்…!

வவுனியா கற்குளம் பகுதியில் சுயேற்சைக்குழுவில் போட்டியிட்ட க. இராமசாமி என்பவர் மீது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடுர்பாக தெரியவருவதாவது,

வவுனியா கற்குளம் பிரதேச்தில் வசிக்கும் இராமசாமி என்பவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு சுயேற்சைக்குழுவில் போட்டியிட்டிருந்தார்.

இந் நிலையில் அப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு தமது கட்சி வேட்பாளர் வெற்றி பெறவிலலை என தெரிவித்து குறித்த சுயேற்சை குழு வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் தகவல் தெரிவிக்கையில்,

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு தான் வீட்டில் இரந்த சமயம் அங்கு வருகை தந்த சுதந்திரக்கட்சியை சேர்ந்த தியாகு என்பவர் என்மீது கதிரையால் தாக்குதல் மேற்கொண்டார். இதன்hல் காயமடைந்த நான் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றேன் என தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா பொலிஸில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிலையில் இச்சம்பவம் வவுனியா உதவி தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

About Thinappuyal News