முன்னாள் ஜனாதிபதியை சுற்றி ஒட்டுமொத்த நாடும் அணி திரண்டுள்ளது, கருணா…!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றி ஒட்டுமொத்த நாடும் அணி திரண்டுள்ளது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய கள்வர்களை விரட்டியடிப்பதற்கு மக்கள் சரியான தீர்மானத்தை வழங்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

முழு நாட்டிலும் தாமரை மலர் பூத்துள்ளது.நான் இதற்கு முன்னரும் கூறியிருந்தேன் மஹிந்த தலைமையிலான மலர் மொட்டு வெற்றியீட்டும் என, அது இன்று நிரூபணமாகியுள்ளது.

இம்முறை மக்கள் கள்வர்களை பிடித்து வெளியேற்ற வேண்டுமேன மக்கள் ஆர்வம் காட்டியிருந்தனர்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மக்கள் சரியான பாடத்தை இந்த அரசாங்கத்திற்கு புகட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்களும் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

மஹிந்த ஐயாவிற்கு, நல்லாட்சி அரசாங்கம் எத்தனை கஸ்டங்களை வழங்கியிருந்தது. சேறு பூசியிருந்தது.

படைவீரர்களின் ஆதரவும் மஹிந்த ராஜபக்சவிற்கே உண்டு என கருணா தெரிவித்துள்ளார்.