மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க வந்த இருவர் கைது…!

மலேசியாவில் இருந்து வருகைத் தந்த இந்திய நாட்டு பிரஜைகள் இருவர் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேக நபர்களின் பயணப்பொதியில் இருந்து சுமார் 514 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப் பொருட்கள் ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வகையை சேர்ந்தது என்றும்,

இதன் சந்தை பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News