தேர்தல் முடிவுகள் வௌியாகி கொண்டிருந்த போது இடம்பெற்ற விபத்து..!

பஸ்யாலை – கிரிஹுல்ல வீதியில் லோலுவாகொட பிரதேசத்தில் உந்துருளியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலக மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

35 வயதுடைய திவுல்தெணிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.