மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு? தமிழினத்திற்கெதிராக தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் இனப்படுகொலையினையே செய்தன.

134

 

யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. 1996 ஆம் ஆண்டு கார்த்திகை 27 அன்று தமிழீழத் தலைவர் வே.பிரபாகரனால் முதன்முதலில்images (1) மாவீரர் தின உரை நிகழ்த்தப்பட்டது. யுத்த வெற்றியினைக் கொண்டாடுகின்ற இராணுவத்தினர் யாரோடு போரிட்டனர்? இராணுவத்தினர் யுத்த வெற்றியினைக் கொண்டாடுவது சரி என்றால், தமிழினம் மாவீரர்களின் தினத்தினை அனுஷ்டிப்பது சரி எனக் கருதப்படுகின்றது. இன்று சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை, வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் வரைக்கும் தமிழினத்தினுடைய போராட்டம் பறைசாற்றப்பட்டிருக்கின்றது.

உள்ளுர், வெளியூர் பேச்சுவார்த்தைகள் என 23 முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றது. டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க இவர்களினுடைய காலத்தில் அடிப்படை இனவாதம் தோற்றுவிக்கப்பட்டதுடன், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான தலைவர் தந்தை செல்வா உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க போன்றோர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள நூலகத்தினை எறித்து சாம்பலாக்கி அங்கொரு இனவெறித்தனத்தினைக் காண்பித்திருந்தனர். அதனையடுத்து ஆட்சிபீடமேறிய பிரேமதாச அரசு விடுதலைப்புலிகளுடன் உற்ற தோழர்கள் என பாசாங்குகாட்டி இந்திய அரசை இந்நாட்டில் இருந்து வெளியேற்றுங்கள். அப்பொழுது நான் வடகிழக்கினை கையில் தருவதாகவும், நல்லுறவினை பேணமுடியும் என வாக்குறுதியினையும் வழங்கினார். அதற்கு ஓர் அடையாளமாக நீங்கள் ராஜீவ் காந்தியினைக் கொல்லவேண்டும் என கட்டளையிடப்பட்டதற்கிணங்க விடுதலைப்புலிகளினால் கொலை செய்யப்பட்டார் ராஜீவ்காந்தி.
பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததனால் பிரேமதாச அவர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் சந்தியில் வைத்து மேதின ஊர்வலத்தின்போது கொலை செய்யப்பட்டார். அதனையடுத்து ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் செம்மணிப்புதைகுழியினை மிகச் கச்சிதமாக நடாத்திமுடித்தார். பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் எனவும், தமிழ்மக்களுக்கு சிறந்த தீர்வினை வழங்குகின்றோம் என பிரபாகரனுக்கு கடிதங்களை அனுப்பி, லட்சுமன் கதிர்காமருடன் இணைந்து விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு தமிழ் மக்களுக்கான இனவழிப்பினை அவரும் மேற்கொண்டார். அரசாங்கத்தினை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியதனால் சந்திரிக்கரசு தனது அரசின் ஆட்சி பீடத்தினை மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தது.

ஆட்சிபீடமேறிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களை நாடகமாக கைகொண்டு, தமிழர்களினுடைய இனவழிப்பினை மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் நிறைவுசெய்தார். மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தருவதாகக் கூறியது. ஆனால் எந்த அரசாங்கங்களும் தமிழ்மக்களுக்கான தீர்வினை இதுவரைப் பெற்றுத்தரவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வடகிழக்குப் பிரதேசத்தில் ஒருசில அபிவிருத்திகள் செய்யப்பட்டிருக்கின்றது.

இதுதான் தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கும், உயிர்த்தியாகங்களுக்கும் கிடைத்த பரிசு. மீண்டும் தமிழினத்தினை அடக்கியொடுக்கும் நடவடிக்கையில் இலங்கையரசும், சிங்கள இனவாதக்கட்சிகளும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்களுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட அனுமதி இல்லையெனில், இந்நாட்டின் ஜனநாயகம் எங்கே போனது? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினரும், அரசியலில் அனுபவம் மிக்கவருமான இரா.சம்பந்தன் அவர்கள் இதனை சிந்தித்துப்பார்க்கவேண்டும். பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் ஒரு நாளை அரசினுடைய அனுமதியினைப் பெற்று செயற்படுத்துவது எதிர்காலத்தில் தமிழினத்திற்கு உகந்ததொன்றாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

THINAPPUYAL NEWS

SHARE