ஐரோப்பிய நாடுகளின் சதிவலையில் மஹிந்த ராஜபக்ஷ – தமிழினம் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

119

 

images (5)ஆசிய நாடுகள் மஹிந்தவை ஆதரிக்க, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என ஆசிகளைத் தெரிவித்துள்ளனர். பொருளாதார வர்த்தகத்தினை மேம்படுத்தும் வகையில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அக்கறை காட்டுவதோடு கடல் வளத்தினையும் அதன் தளங்களையும் தன்வசப்படுத்திக்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றன.

இதற்கிடையில் சீன அரசும், இந்திய அரசும் விட்டுக்கொடுப்பதாகவில்லை. குறிப்பாக அமெரிக்கா மஹிந்தவை இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும் என்கின்ற குறிக்கோளாடு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மூலம் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவாரா அல்லது தோல்வியடைவாரா என்பதற்கப்பால், தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என்பதை தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் பேசும் மக்களும் சிந்தித்துச் செயற்படுவது சிறந்தது.

நாடளாவிய ரீதியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகமான ஆதரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளபோதிலும், மஹிந்தவிற்கு மறைமுகமான ஆதரவினை தமிழ் அரசியல்வாதிகள் வழங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் சதிவலையில் தமிழ் அரசியல்வாதிகளும், தமிழினமும் சிக்காது சிந்தித்துச் செயற்படுவது சிறந்ததொன்றாகும்.

SHARE