மகிந்தவின் நம்பிக்கைக்குரிய அஸ்வர் எம்.பி. பதவி விலகினார்!-

106
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

இப்பதவிக்கு ஜனாதிபதியின் மிக நெருங்கிய உறவினர் ஒருவரை நியமிக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

 

SHARE